எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தூத்துக்குடி : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் பொருட்டு புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள சிப்காட் பகுதிகளில் தொழில் வளங்களை பெருக்கி அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார். நெல்லை, தூத்துக்குடி சிப்காட் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் தமிழக அரசு சார்பில் தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த வகையில் தென் மாநிலத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் முதல் மின் வாகன தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தை வியட்நாமை சேர்ந்த பிரபல நிறுவனமான வின் பாஸ்ட் தொடங்க உள்ளது. இதற்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 400 ஏக்கர் நிலபரப்பில் மின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில் ஆண்டு ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் மின் வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வின் பாஸ்ட் மின் கார் தொழிற்சாலை அமையவுள்ள இடத்தின் நுழைவுவாயில்.ரூ. 16 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்த தொழிற்சாலையில் முதற்கட்டமாக 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த புதிய மின் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி சில்லா நத்தத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு புதிய கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, கீதாஜீவன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், ராஜ கண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., வின் பாஸ்ட் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை செயல் அலுவலர் பாம் சான் சவு, துணை தலைமை செயல் அலுவலர் பார்த்தா டட்டா, கலெக்டர் லட்சுமிபதி, சிப்காட் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவர்கள், வீடு சேதம் அடைந்தவர்கள், படகுகள் சேதம் அடைந்த மீனவர்கள் என 16 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதே போல் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து விழாக்கள் நடைபெற்ற பகுதிகளுக்கு செல்லும் வழியில் சாலைகளில் இருபுறமும் தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முதல்வரின் வருகையையொட்டி தூத்துக்குடி முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை
07 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்படுகின்றன. பகல் 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-02-2025.
07 Feb 2025 -
ஸ்ரேயாஸ் ஐயர்-சுப்மன் கில் பார்ட்னஷிப்பால் தோல்வி : இங்கிலாந்து கேப்டன் பட்லர் பேட்டி
07 Feb 2025நாக்பூர் : இந்திய அணியின் பேட்ஸ்மேன்க ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது பார்ட்னர்ஷிப்தான் வெற்றியை எங்களிடம் இருந்து பறித்தது என்று இங்கிலாந்து கேப்டன்
-
நெல்லையில் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை சுவைத்த முதல்வர் ஸ்டாலின்
07 Feb 2025திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனிலுள்ள பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை அல்வாவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு வாங்கி ருசித்தார்.
-
டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும்
07 Feb 2025புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்று பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரம் தெரியவந்துவிடும்.
-
சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள்: சென்னையில் ரூ.8 லட்சம் அபராதம் விதிப்பு
07 Feb 2025சென்னை : சென்னையில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள் கொட்டியவர்கள் மீது ரூ.8 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது
-
ட்ரம்புக்கு ‘கோல்டன் பேஜர்’ பரிசளித்த இஸ்ரேல் பிரதமர்
07 Feb 2025நியூயார்க் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை ட்ரம்ப் கடந்த மாதம் பதவியேற்ற நிலையில், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவராக நெதன்யாகு அறியப்படுகிறார்.
-
தமிழக மீனவர்கள் விவகாரம்: பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
07 Feb 2025புதுடெல்லி: தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
-
பாதுகாப்புப்படை தாக்குதலில் பாக்.கில் 12 பயங்கரவாதிகள் பலி
07 Feb 2025பெஷாவர் : பாகிஸ்தான் அருகே உள்ள வடமேற்கு பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள் விடுதலை
07 Feb 2025ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் டிசம்பர் 24ம் தேதி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
-
மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு
07 Feb 2025புதுடெல்லி, : மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் வரும் 12-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது சென்னை ஐகோர்ட்
07 Feb 2025சென்னை: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை வருகிற 12-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
07 Feb 2025சென்னை: தங்கம் விலை நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
-
சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம்: உடற்கல்வி ஆசிரியர் கைது
07 Feb 2025சேலம் : சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த தற்காலிக உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
உள்ளாட்சி பணிகளில் பதவிக் காலம் முடிந்த பிரதிநிதிகளின் தலையீட்டை தடுக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
07 Feb 2025சென்னை: பதவிக் காலம் முடிந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியில் தலையிடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஓ.பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ .க.வுக்கு எதிரான குற்றச்சாட்டு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ்
07 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
நில முறைகேடு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கர்நாடக ஐகோர்ட்டு மறுப்பு
07 Feb 2025பெங்களூரூ: சித்தராமையா மனைவி பார்வதி தொடர்பான நில முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
-
தமிழகத்திற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: திருநெல்வேலி அல்வாவைவிட மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வா தற்போது பேமஸ் : அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
07 Feb 2025திருநெல்வேலி : தமிழகத்திற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று மத்திய அரசை மீது கடுமையாக குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது திருநெல்வேலி அல்வாவைவிட
-
திண்டுக்கல் டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்
07 Feb 2025சென்னை : திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
டெல்லியில் தேர்தல் விதிமீறல்: இதுவரை 1,100 வழக்குகள் பதிவு
07 Feb 2025புதுடெல்லி : டெல்லியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
அமெரிக்க பயணத்தின் போது அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி : மத்திய வெளியுறவு செயலர் தகவல்
07 Feb 2025புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருப்பதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.
-
கனடாவில் காணாமல் போன 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் : வெளியான தகவலால் அதிர்ச்சி
07 Feb 2025கனடா : இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், 20 ஆயிரம் மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப
-
இஸ்ரேல் மீது நடவடிக்கை: சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை
07 Feb 2025வாஷிங்டன்: இஸ்ரேல் மீதான விசாரணைகள் தொடர்பாக சர்வதேச கோர்ட்டு மீது தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து
07 Feb 2025பிரக்யாராஜ்: பிரக்யராஜ்ஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
-
ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் விசை படகுகளை இயக்க பசுமை தீர்ப்பாயம் தடை
07 Feb 2025சென்னை : ஆமைகள் இனப்பெருக்க காலத்தில் படகுகள் இயக்க தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.