முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வித்தைக்காரன் விமர்சனம்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      சினிமா
Magician-Review 2023-02-26

Source: provided

மேஜிக் நிபுணரான சதீஷ், எப்படிப்பட்ட இடமாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட பொருளாக இருந்தாலும் சரி, அதை தனது புத்தியாலும், வித்தையாலும் திருடும் திறன் படைத்தவர். அவருடைய திறமையை அறிந்த ஆனந்தராஜ், அவருடன் சேர்ந்து கடத்தல்காரர்கள் சுப்பிரமணிய சிவா மற்றும் மதுசூதன ராவ் ஆகியோரது தங்கம் மற்றும் வைரத்தை கொள்ளையடிக்க முடிவு செய்கிறார். கொள்ளையடித்த பொருட்களை சரிசமமாக பிரித்துக்கொள்ளலாம், என்ற ஒப்பந்தபடி சதீஷ் திருடுகிறார். ஆனால், காரியம் முடிந்த பிறகு சதீஷை கழட்டிவிட்டு விட்டு, தங்கம் மற்றும் வைரத்தை அபகரிக்க ஆனந்தராஜ் திட்டம் போட, அவரது திட்டம் பளித்ததா? , சதீஷின் வித்தை ஜெயித்ததா? என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘வித்தைக்காரன்’ படத்தின் கதை.

கதாநாயகனாக நடித்தாலும் தனது வழக்கமான காமெடி பாணியில் நடித்திருக்கிறார்

நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன் குப்தா, கதையில் முக்கிய பங்கு வகித்தாலும், காட்சிகளில் முக்கியத்தும் இன்றி இருக்கிறார். 

குறிப்பாக ஆனந்தராஜ் செய்யும் காமெடிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானர் கதை என்றாலும், சதீஷ் ஹீரோ என்பதற்காக முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் வெங்கி, முதல் பாதி படத்தை கொள்ளை சம்பவங்கள் மூலம் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று, இரண்டாம் பாதி படத்தை காமெடி கலாட்டாவாக கொடுத்து ரசிகர்களை இன்பத்தில் ஆள்திருக்கிறார்.

விமான நிலையத்தில் நடைபெறும் கொள்ளை சம்பவம் லாஜிக் இல்லாமல் இருந்தாலும், அந்த இடத்தில் அனைத்து கதாபாத்திரங்களையும் ஒன்று சேர்த்து, அவர்கள் மூலம் காமெடி திருவிழாவை நடத்தி படத்தை சிரித்தபடி முடித்திருக்கிறார் அவருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

மொத்தத்தில், இந்த ‘வித்தைக்காரன்’ வித்தைகளில் வென்றவன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து