முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்கை எனக்கு ஸ்பெஷல்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      சினிமா
Mangai 2023-02-26

Source: provided

அறிமுக இயக்குநர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில், ‘கயல்’ ஆனந்தி கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மங்கை’. கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தை ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரித்திருக்கிறார். வரும் மார்ச் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை கயல் ஆனந்தி, “’கயல்’ வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து 'மங்கை' படம் வெளியாக இருக்கிறது. 'மங்கை' எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது நான் படத்தில் நடிக்க வந்துவிட்டேன்.

அப்போது சினிமா குறித்து ஒன்றும் தெரியாது. இப்பொழுதும் பெரிதாக ஒன்றும் தெரியாது. இப்பொழுது தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் படங்களை எடுத்துப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன்.என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து