முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமாச்சல் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் சஸ்பெண்டு: சபாநாயகர் உத்தரவு

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      இந்தியா
Sukhwinder-Singh-Sugu 2023

Source: provided

சிம்லா : இமாச்சல பிரதேச சட்டசபையில் தொடர் அமளியில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அவர்கள் சபையில்  இருந்து வெளியேற்றப்பட்டனர். 

இமாச்சல பிரதேச சட்டசபை நேற்று கூடிய போது, எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.க. உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.  அவர்களை அமரும்படி சபாநாயகர் கூறினார்.  ஆனால், அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதுடன், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை சஸ்பெண்டு செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். அவர்கள் அவையில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். 

அதன்படி, எதிர்க்கட்சி தலைவர் ஜெய்ராம் தாகூர், விபின் சிங் பார்மர், ரந்தீர் சர்மா, லோகேந்தர் குமார், வினோத் குமார், ஹன்ஸ் ராஜ், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, திரிலோக் ஜம்வால், சுரேந்தர் ஷோரி, தீப் ராஜ், பூரன் தாக்கூர், திலீப் தாக்குர் மற்றும் இந்தர் சிங் காந்தி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

இதே போன்று, மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் பொது பணி துறை அமைச்சரான  விக்ரமாதித்யா சிங் ராஜினாமா செய்துள்ளார்.  இதனால், அரசியல் ஸ்திரமற்ற சூழலை இமாச்சல பிரதேசம் எதிர்கொண்டு உள்ளது. 

முதல்வருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோர கூடிய சூழலில், 15 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் கட்சி மாறி வாக்களித்த சூழலில், ராஜ்யசபை சீட் ஒன்று பா.ஜ.க.வின் வசம் சென்றது.  இந்த சூழலில், இமாச்சல பிரதேச அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு, பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து