முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் தோல்வியை சந்திப்பார் : சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      இந்தியா
Jagan-Mohan-Reddy 2023-06-0

Source: provided

புதுடெல்லி : ஆந்திரப் பிரதேச தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி இந்த முறை பெரும் தோல்வியை சந்திப்பார் என்று தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் நிகழ்வில் பங்கேற்ற பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: “ஜெகன்மோகன் ரெட்டி தோற்கடிக்க முடியாத வலிமையானர் என்ற அனுமானம் இருக்கிறது. ஆனால், அவர் கீழ் நோக்கிச் செல்கிறார். என்னிடம் ஆந்திர அரசியலைப் பற்றிய தரவுகளோ, முன் அனுபவமோ இல்லை. ஆனால், அவர் பெரிய அளவிலான தோல்வியை சந்திப்பார். மக்களுக்கு வழங்கும் இலவசங்களால் வெற்றி பெறலாம் என்று நினைத்தால், அது நடக்காமல் போகலாம். ஏனெனில், இலவச திட்டங்களுக்கு 50 சதவிகித மக்கள் தகுதியற்றவர்களாக உள்ளனர். அவர்களிடம் அரசு சென்றடையவில்லை.

பீகார் அல்லது ஜார்கண்டில் சாதி ரீதியான போட்டியை பற்றி பேசலாம், ஆனால் தமிழ்நாடு, தெலங்கானா அல்லது ஆந்திராவில் முடியாது. அவர்கள் தொழிற்சாலைகள், சிறந்த சாலைகள், மருத்துவம் மற்றும் கல்வி வசதிகளை எதிர்பார்க்கின்றனர். நான் ஆந்திரத்தை சார்ந்தவனாக இருந்தால், விஜயவாடா அல்லது விசாகபட்டினம் வருங்கால நகரமாக வரப்போகிறது என்று பெருமிதம் கொள்வேனா?. எனது பக்கத்து மாநிலத்தின் நகரங்களான சென்னை, கொச்சி அல்லது ஹைதராபாத்தைவிட தாழ்வாக உணர்வேன். ஜெகன் மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்று கணிப்பது கடினமல்ல.” எனத் தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து