முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      தமிழகம்
Annamalai 2024-04-17

Source: provided

கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும், ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில், கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியின், அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட, குடிதண்ணீர்ப் பிரச்சினை, உட்கட்டமைப்பு, விசைத்தறி, விவசாயப் பிரச்சினைகள் என அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண, பாரதப் பிரதமர் மோடி ஆதரவுடன், பா.ஜ.க. சார்பாக வழங்கப்பட்டுள்ள நூறு வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, கோவையை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று உறுதி அளிக்கிறேன்.

நமது பாரதப் பிரதமர் மோடி, 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கும் போது, கோயம்புத்தூர் மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளும், நகரத்தின் அடிப்படை வசதிகள் அனைத்தும் பெற்று வளர்ச்சி பெற, மத்திய அரசின் திட்டம் முழுமையாக மக்களைச் சென்று சேர்வதை கண்காணிக்க, கேள்வி கேட்க, நமது குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய, அவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில், வளர்ச்சி பெற்ற இந்தியாவில் வசிக்க, உங்கள் அன்புத் தம்பி, உங்கள் வீட்டுப்பிள்ளை, அண்ணாமலை ஆகிய எனக்கு, கோவை பாராளுமன்றத் தொகுதியில், கட்சி வேறுபாடின்றி தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து