முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைரலாகும் ரோகித் விடியோ

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது. மும்பை அணிக்காக 5 கோப்பையை பெற்று தந்த ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த இரண்டாடுகளாக மும்பை அணி மோசமாக விளையாடி வருகிறது. தற்போது ஹார்திக் பாண்டியா கேப்டனாக இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அசத்தியது. இதில் சதமடித்து அசத்தினார் ரோகித்.

36 வயதான ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார். தற்போது போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பேட்டிற்கு ஆசையாக ஸ்டிக்கர் ஒட்டும் விடியோவை வெளியிட்டுளார். அந்த விடியோவில், "சிகிச்சை” எனத் தலைப்பிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் ரோகித்தை ‘குழந்தை மனசுக்காரன்’ என கமெண்டுகளில் புகழ்ந்து வருகிறார்கள். புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி 7வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியுடன் நாளை சண்டிகரில் மோதுகிறது.

_________________________________________________________________

ரன் அடிக்காமலே ஜெயித்த ஆவேஷ் கான்

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ரன்கள் சோ்த்து வென்றது. 9வது விக்கெட்டாக 17.4ஆவது ஓவரில் களமிறங்கினார் ஆவேஷ் கான். ஒரு பந்து கூட விளையாடாமல் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

2023இல் லக்னோ அணியில் இது மாதிரி ஒரு முறை கடைசி பந்தில் ரன் அடிக்காமல் பைஸில் வெற்றி பெற்றார். அதன் வெற்றியை ஆக்ரோஷமான விதத்தில் ஹெல்மெட்டை கீழேப்போட்டு கொண்டாடினார். இது அப்போதே வைரலானது. தற்போது இரண்டாவது முறையாக ஒரு ரன்னும் அடிக்காமல் வெற்றிக்கு உதவியுள்ளார். இதனால் ராஜஸ்தான் அணியினர் ஆவேஷ் கானை ஃபினிஷர் என பாராட்டி விடியோ வெளியிட்டுள்ளார்கள். லக்னோ அணியும் பாராட்டி ஜாலியாக பதிவிட்டுள்ளது. இணையத்தில் ரசிகர்களும் ஆவேஷ் கானை புகழ்ந்து வருகிறார்கள். ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லரை விடவும் ஆவேஷ் கான் இணையத்தில் வைரலாகி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து