முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2024      உலகம்
Maldives 2024-04-19

மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன், கடந்த 2013-2018 வரை ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு தீவை குத்தகைக்கு விட்டு பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக  அந்நாட்டின் நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. 

தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்துல்லா யாமீன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டையை எதிர்த்து அப்துல்லா யாமீன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டையை ரத்து செய்து உத்தரவிட்டது. 

கடந்த 2022-ம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும், இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இருப்பினும் மறுவிசாரணை குறித்த தேதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாலத்தீவில் அடுத்த 2 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அப்துல்லா யாமீனின் விடுதலை அந்நாட்டின் அதிபர் முகமது முய்சுவின் கட்சிக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முகமது முய்சுவும், அப்துல்லா யாமீனும் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து