முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      விளையாட்டு
24-Ram-53

Source: provided

சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி. மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் அபாரமாக பேட் செய்து தனது அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.

39-வது ஆட்டம்...

2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 39 ஆவது போட்டியில் நேற்று (ஏப். 23) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை பேட்டிங்...

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ரன்களுக்கு திணறிய சென்னை அணி நேரம் செல்ல செல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி 5 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

211 ரன்கள் இலக்கு...

இறுதியாக 20  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. லக்னோ அணியில் மேட் ஹென்றி மோஸ்கான் மற்றும் யாஷ் தாக்கூர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 211 ரன்கள் இலக்குடன் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் ஓவரில் டிகாக்கை வெளியேற்றினார் தீபக் சாஹர். 5-வது ஓவரில் கே.எல்.ராகுலை வீழ்த்தினார் முஸ்தபிசுர் ரஹ்மான்.

முன்னேறயது லக்னோ...

அதன் பின்னர் ஸ்டாய்னிஸ் மற்றும் தேவ்தத் படிக்கல் இணைந்து 55 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். படிக்கல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் உடன் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பூரன் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் தீபக் ஹூடாவுடன் இணைந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்டாய்னிஸ். 56 பந்துகளில் அவர் சதம் கண்டார். அவரது அபார இன்னிங்ஸின் பலனாக 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். அதன் மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஸ்டாய்னிஸ் 124 ரன்கள் மற்றும் ஹூடா 17 ரன்கள் உடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு லக்னோ அணி முன்னேறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.

ருதுராஜ் பேட்டி....

தோல்வி குறித்து பேசிய சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் லக்னோ அணி வீரர் ஸ்டோயினிஸ்-க்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "13 ஆவது ஓவர் வரை போட்டி எங்களின் கையில் தான் இருந்தது, ஆனால் ஸ்டோயினிஸ் சிறப்பாக விளையாடினார். எங்களது தோல்விக்கு பனி முக்கிய காரணமாக அமைந்தது. "பனி அதிகம் இருந்ததால், பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. போட்டியை இன்னும் சிறப்பாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் இதுவும் போட்டின் ஒரு பகுதி தான். இதை கட்டுப்படுத்த முடியாது. போட்டி முடிவில் லக்னோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது," என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து