முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை கடைசி நாள்

சனிக்கிழமை, 18 மே 2024      தமிழகம்
Arts-college 2024-05-18

Source: provided

சென்னை : தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.  

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. உயர்கல்வியை தொடர விரும்பும் ஏழை, எளிய மாணவிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுவரை விண்ணப்ப பதிவு 2 லட்சத்தை கடந்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 7 ஆயிரத்து 532 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.  ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 977 பேர் விண்ணப்ப பதிவு கட்டணம் செலுத்தி உள்ளனர். 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு நாளை  (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க 2 நாட்கள் இருப்பதால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு அடுத்த மாதம் 6-ம தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் 2 வார காலம் போதுமானதல்ல. மேலும் 10 நாட்கள் வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து