முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டிவி. காட்சிகளை கைப்பற்றிய போலீசார்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Swati-Maliwal 2024-05-17

Source: provided

புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற  போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (டிவிஆர்) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  

ஆம்ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சுவாதி மாலிவால், கெஜ்ரிவாலை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்ற போது கெஜ்ரிவாலின் உதவியாளர் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.  அதன்பேரில் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சி.சி.டி.வி., கேமராக்களில் இந்த விவகாரம் தொடர்பாக, பதிவான 2 வீடியோக்களை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. முதல் வீடியோவில் சுவாதி மலிவாலுக்கும், பிபவ் குமாருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலும், இரண்டாவது வீடியோவில் சுவாதி மலிவாலை, முதல்வர் வீட்டில் இருந்து பெண் பாதுகாவலர்கள் வாசல் வரை அழைத்துச் சென்று வெளியே விடும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

இந்நிலையில்,  கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்ற டெல்லி போலீசார், அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (டிவிஆர்) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து