முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு : தேர்தலில் பணிகளில் ஆணையம் மும்மூரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Election

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று 5-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

7 கட்டங்களாக... 

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19-ந் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26-ந் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி 3-ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13-ந் தேதி 4-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. 

8 மாநிலங்களில்... 

இதனிடையே, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) 5-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிஹாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1, லடாக்கில் 1 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளன.

695 வேட்பாளர்கள்... 

5-ம் கட்ட தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் முக்கிய வி.ஜ.பி. வேட்பாளர்களும் அடங்குவர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் 5-ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 264 பேரும், மிக குறைவாக லடாக்கில் 3 பேரும் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஸ்கோயல், ஸ்மிரிதி இரானி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் முக்கியமானவர்கள்.

ரேபரேலி தொகுதியில்... 

ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் சர்மா போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் லக்னோ மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இன்டியா கூட்டணி சார்பில் சமாஜ்வாதியை சேர்ந்த ரவிதாஸ் மெஹ்ரோத்ரா போட்டியிடுகிறார்.

லல்லு மகன் போட்டி... 

பீகாரின் ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியில் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இன்டியா கூட்டணி சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த ஷிவ் சந்திர ராம் களத்தில் உள்ளார். பீகாரின் சரன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் ராஜீவ் பிரதாப் ரூடியை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லல்லு பிரசாத் யாதவின் மகன் ரோகிணி ஆச்சார்யா களமிறங்கி உள்ளார்.

ஒடிசா சட்டசபைக்கு...

பாராளுமன்ற தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் உள்ள 174 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 13-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 2-ம் கட்டமாக 35 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. மேலும், கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு, வாக்குச்சாவடிகளில் உரிய ஏற்பாடுகளை செய்ய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில்... 

வாட்டர் கூலர்கள், மின்விசிறிகள், கூடாரங்கள் போன்றவற்றை பொருத்தி வாக்காளர்களை கடும் வெப்பம் மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு உட்பட்ட வக்குச்சாவடிகளில் 60 ஆயிரத்துக்கும்க்கும் மேற்பட்ட மத்தியப் படை வீரர்களையும், 30 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதை தொடர்ந்து வருகிற 25-ம் தேதி 6-ம் கட்ட தேர்தலும், ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்ட தேர்தலும் நடைபெறுகின்றன. 7 கட்ட தேர்தல் நிறைவடைந்ததும் ஜூன் 4 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து