முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2024      இந்தியா
Kejriwal 2023 04 16

Source: provided

புதுடெல்லி : டெல்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி  மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் என்றும் தெரிவித்தார்.

கிழக்கு டெல்லியிலுள்ள துக்ளகாபாத் பகுதியில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பேரணியில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், டெல்லிக்கான என் பணிகளைப் பார்த்து ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். உங்கள் குழந்தைகளுக்காக நல்ல பள்ளிகளைக் கட்டி அவர்கள் வாழ்வை மேம்படுத்தியதற்காக பிரதமர் மோடி என்னை சிறைக்கு அனுப்பியுள்ளார்.

சிறிய கட்சியைச் சேர்ந்த சிறிய மனிதன் நான். என்னை கைது செய்து சிறையில் அடைத்து நான் திறந்த பள்ளிகளை மூட வேண்டும் என்பதே அவர்களின் சதி. பிரதமர் மோடி தலைமையில் 10 ஆண்டுகளாக ஆட்சி நடக்கிறது. ஆனால் அதில் என்ன அனுபவங்கள் கிடைத்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஜூன் 4ஆம் தேதி இன்டியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் எனப் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து