முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

திங்கட்கிழமை, 20 மே 2024      இந்தியா
Iran-President-Ibrahim-2024

டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

விபத்து நடந்த இடத்தை துருக்கி நாட்டு ட்ரோன் கண்டுபிடித்துள்ளது. அந்த பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த நிலையில் அதில் பயணம் செய்த அதிபர் உள்ளிட்டவர்களின் உடல் பாகங்களும் சிதறிக் கிடப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன் அமிரப்துல்லாஹியனும் உயிரிழந்தார்.

ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைஷி. இவர், அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் (மே.19) ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக, அவர் பயணித்த ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

டெஹ்ரான் நகரில் இருந்து 600 கி.மீ., தொலைவில் உள்ள ஜோல்பாவில் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதிபர் இப்ராஹிம் ரைஷியுடன், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் பயணித்துள்ள நிலையில், விபத்தில் அனைவரும் உயிரிழந்தனர். அனைவரது உடல்களும் சில பாகங்களாக மீட்கப்பட்டன.

கடந்த 2021ல் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராஹிம் , இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். சமீபத்தில், சிரியாவில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகத்தின் மீது, இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீது, ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தி பதிலடி கொடுத்தார்.

பிரதமர் மோடி இரங்கல்

இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஷியின் மறைவால் மன வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியா - ஈரான் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய அதிபர் தேர்வு

ஈரான் அரசியல் சாசனத்தின்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனால் துணை அதிபர் முகமது முக்பர் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் அதிபராக பதவியேற்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து