முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார் பிரதமர் : கறுப்புக்கொடி காட்ட விவசாயிகள் திட்டம்

புதன்கிழமை, 22 மே 2024      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

சண்டிகர் : அரியானாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கருப்பு கொடி காட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேளாண் விளை பொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி,  ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து டெல்லியை நோக்கி செல்லும் பேரணி கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் நடைபெற்றது. பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லிக்குள் நுழைய முயன்றதால், சாலைகளில் தடுப்புகளை அமைத்து எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனிடையே, நாடு முழுவதும் ஏப்.19-ம் தேதி தொடங்கி 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவுற்று, தற்போது வரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் வரும் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், அரியானாவில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கருப்பு கொடி காட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ‘டெல்லிக்குள் விவசாயிகளை நுழைய விடாத பாஜகவுக்கு இங்கு வர தடை விதிக்கப்படுகிறது’ என்று அறிவிப்பு பலகை எழுதி அரியானாவில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து