முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் முதல் குழு இன்று அமெரிக்கா பயணம்

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      விளையாட்டு
24 Ram 51

Source: provided

புதுடெல்லி: டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

20 அணிகள் பங்கேற்பு...

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதவுள்ளன. மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளது.

அமெரிக்காவிலேயே... 

இதில் இந்திய அணி விளையாடும் குரூப் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து 9-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஜூன் 15-ம் தேதி கனடா அணிகளுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.

இந்திய அணி அறிவிப்பு...

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், சிராஜ் மற்றும் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ரிங்கு சிங், சுப்மன் கில், ஆவேஷ் கான் மற்றும் கலீல் அகமது ஆகியோர் இருக்கின்றனர்.

இன்று பயணிக்கிறது...

இந்த நிலையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முதல் குழு இன்று அமெரிக்காவுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மே 26-ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் தவிர்த்து மற்ற வீரர்கள் இன்று அமெரிக்கா செல்ல உள்ளனர். சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான், சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஆகியோர் பயணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் இவர்கள் அனைவரும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பின் அமெரிக்காவுக்கு புறப்படவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து