முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6-ம் கட்ட வாக்குப்பதிவின் போதும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை-மோதல்

சனிக்கிழமை, 25 மே 2024      இந்தியா
West-Bengal 2024-05-25

Source: provided

கொல்கத்தா : பாராளுமன்றத்திற்கு 6-ம் கட்டமாக நேற்று நடந்த தேர்தலிலும் மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 6-வது கட்டமாக 58 தொகுதிகளுக்கு நேற்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. இதன்படி மேற்கு வங்காள மாநிலத்தில் 8 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. முன்னதாக நேற்று காலை முதல் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இதனிடையே மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவின்போது ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. மேலும் 11 அரசியல் கட்சிகளிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு, வாக்குச்சாவடிக்குள் பூத் ஏஜெண்டுகளை அனுமதிக்கவில்லை என்பன உள்ளிட்ட 954 புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு சுமூகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 5-ம் கட்ட வாக்குப்பதிவின் போது மேற்கு வங்காளத்தில் ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில நேற்றும் சில வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து