முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் : தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

சனிக்கிழமை, 25 மே 2024      இந்தியா
Rajeev-Kumar 2023-08-27

Source: provided

புதுடெல்லி : ஜம்மு - காஷ்மீரில் விரைவில் பேரவைத் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நேற்று மக்களவைத் தேர்லின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவின்போது, நேற்று காலை வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை செலுத்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். மக்களவைத் தேர்தலின்போது, ஜம்மு - காஷ்மீரில் பதிவான வாக்குகள் உற்சாகத்தை அளிக்கின்றன. எனவே, மிக விரைவாக யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ராஜீவ் குமார் கூறினார்.

ஜம்மு - காஷ்மீர் மக்கள், அவர்களுக்கான அரசை அவர்களே தேர்வு செய்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இது என் காதுகளில் ஒரு இசையைப் போல ஒலிக்கிறது, மக்கள், இளைஞர்கள், மகளிர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து, பெரிய அளவில் வாக்குச் சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஜனநாயகம் என்ற மரத்தின் ஆனிவேரானது மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்கும்போதுதான் பலமாகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து