முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை தொடர்: வாஷிங்டன்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்

புதன்கிழமை, 29 மே 2024      விளையாட்டு
Indian-players-1 2024-05-29

Source: provided

வாஷிங்டன் : டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி வாஷிங்டன்னில் நேற்று பயிற்சியை தொடங்கினர். இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இந்திய அணியுடன் இணைய விராட் கோலி இன்று புறப்பட்டு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 1-ம் தேதி...

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம்பெற்று விளையாடுகின்றன.

ஐயர்லாந்துக்கு...

இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் ஏ-ல் உள்ள இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியுடன் தனது முதல் போட்டியை விளையாடுகிறது. ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியுடனும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்கா, ஜூன் 15-ம் தேதி கனடா ஆகிய அணிகளுடனும் மோதுகிறது.

இந்திய அணி...

அணியின் வீரர்களான ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பந்த்( விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன்( விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா,(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சகல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் பயிற்சி...

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக முதல் இரண்டு குழுவாக வீரர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து  இந்திய அணி பயிற்சியைத் தொடங்கியுள்ளது. ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், ஷிவம் துபே, அக்சர் படேல் மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் முதல் பேட்சாக அமெரிக்காவிற்கு சென்றனர். இவர்களுடன் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் பிற பணியாளர்களும் சென்றடைந்தனர்.

கோலி மட்டும்... 

ஐபிஎல் பைனல் போட்டி காரணமாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன், யுஸ்விந்திர சாஹல், ரிங்கு சிங் உள்ளிட்ட வீரர்கள் 2-ம் கட்டமாக அமெரிக்க சென்றுள்ளனர். இரண்டு குழுவாக வீரர்களும் அமெரிக்கா சென்றதை அடுத்து இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். ஆனால் இதுவரை விராட் கோலி மட்டும் அமெரிக்கா செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இன்று செல்கிறார்?

விராட் கோலி இன்று (மே 30ம் தேதி) அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் அதன் பின்னர் தான் அவர் இந்திய அணியுடன் சேருவதால் வங்க தேச அணியுடனான முதல் பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடும் வாய்ப்பு குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  “தாமதமாக அணியில் சேரப்போவதாக கோலி முன்பே எங்களிடம் தெரிவித்திருந்தார், அதனால்தான் பிசிசிஐ அவரது விசா தள்ளிப்போட்டது. அவர் இன்று (மே 30 ஆம் தேதி) அதிகாலையில் நியூயார்க்கிற்கு விமானத்தில் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து