முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஸல் ஆயிரம் ரன்கள்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2024      விளையாட்டு
Andre-Russell 2024-05-09

Source: provided

சர்வதேச டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல் 1000 ரன்கள் எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் கயானாவில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆண்ட்ரே ரஸல் அதிரடியாக 17 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். உகாண்டாவுக்கு எதிரான போட்டியில் 30 ரன்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஆண்ட்ரே ரஸல். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இதுவரை 77 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1000 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 71 ஆகும்.

யுவராஜ் சிங் கணிப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஐசிசியில் அவர் பேசியதாவது: நாம் அனைவரும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை மிகுந்த உணர்வுபூர்வமாக பார்க்கிறோம் என நினைக்கிறேன். 

ஏனென்றால், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிறைய வரலாறு இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிங்கில் இந்திய அணி வலுவாக இருப்பதாக நினைக்கிறேன். ரோகித் சர்மா மற்றும் முகமது அமீர் இடையேயான போட்டி மற்றும் ஷகின் அஃப்ரிடி மற்றும் விராட் கோலி இடையேயான போட்டி எவ்வாறு இருக்கப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருக்கிறேன். ஆட்டத்தின் சூழ்நிலைகளைப் புரிந்து விளையாடுவது மிகவும் முக்கியம். ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாடும் அணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.

2 தங்கம் வென்றார் செளரப்

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். ஸ்விட்சர்லாந்து நாட்டின் நோட்வில் பகுதியில் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி ஜூன் 9ஆம் தேதி (நேற்றுடன்) முடிந்தது. இப்போட்டியில், ஹிமாசலப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டம் ரூபா காயா பகுதியைச் சேர்ந்தவர் செளரப் சர்மா இப்போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

155 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.சிறு வயது முதலே விளையாட்டின்மீது ஆர்வம் கொண்ட சர்மா, தேசிய அளவில் 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வமுடன் இருந்த செளரப் சர்மாவின், நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளதாகவும், இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்தை அடைந்துள்ளதாகவும், அவரின் சகோதரர் விகாஸ் சர்மா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து