முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாயத்து தலைவரில் இருந்து மத்திய அமைச்சரான முதல்முறை எம்.பி.

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      இந்தியா
Dogan-Sahu 2024-06-10

புது டெல்லி, சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டோகன் சாஹு, ஞாயிற்றுக்கிழமை மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தொகுதியை தவிர மற்ற 10 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றி இருந்தாலும், அம்மாநிலத்தில் இருந்து முதல்முறையாக எம்பியாக தேர்வாகியுள்ள டோகன் சாஹுவுக்கு அமைச்சரவையில் இடம் அளித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சத்தீஸ்கரில் செல்வாக்கு மிகுந்த இதர பிற்படுத்தப்பட்ட சமூகமான சாஹு பிரிவைச் சேர்ந்த டோகன், பிலாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் தேவேந்திர யாதவை 1.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 1994-ஆம் ஆண்டு சூரஜ்புரா கிராம பஞ்சாயத்தின் தலைவராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய டோகன், 2013-ல் லோர்மி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2018 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டோகனுக்கு வாய்ப்பளிக்கப்படாத நிலையில், பாஜக கிஷன் மோர்சாவின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு பஞ்சாயத்து தலைவராக அரசியல் வாழ்க்கையை தொடங்கிய டோகன், 30 ஆண்டுகளில் மத்திய அமைச்சராக உருவெடுத்துள்ளது பாஜக தலைவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து