எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுப்புற சூழ்நிலையை மேம்படுத்தவும், நல்ல வருமானம் பெறவும் மிகவும் முக்கிய பங்கு பெறுவது தோட்டக்கலைப் பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் வாசனை திரவியங்கள்.
தற்பொழுது பெருநகரங்கள், சிறு நகரங்களில் வசிக்கும் நகர மக்களின் மத்தியில் வீட்டுக்காய்கறித் தோட்டம் அமைத்தல் மிகவும் பிரபலமாகி வருகிறது. விவசாயிகளின் மத்தியில் குறைந்த நீர், குறைந்த பராமரிப்பு செலவில் அதிக லாபம் கொடுக்கக்கூடிய பழமரங்கள் சாகுபடி தற்சமயம் பரவி வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் பழக்கன்று தேவை, நகர மக்களின் வீட்டுக் காய்கறித் தோட்டத்திற்கான காய்கறி நாற்றுகள் மற்றும் தொழில் நுட்ப ஆலோசனைகளை பூர்;த்தி செய்வதில் மிகவும் முக்கிய பங்கு வசிப்பது தோட்டக்கலைத் துறையின் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் ஆகும். விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் அருகே பூவாணி மற்றும் மேலத்தொட்டியபட்டி ஆகிய இடங்களில் இரு அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த பண்ணைகளில் விவசாயிகளுக்குத் தேவையான வீரிய ஒட்டு மா ரகங்கள், கொய்யா ரகங்கள், சப்போட்டா, எலுமிச்சை, வீரிய ஒட்டு ரக பப்பாளி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடியாக விற்பனை மூலமும், அரசு மான்ய திட்டங்கள் மூலமும் விவசாயிகளக்கு கிடைக்கச் செய்யப்படுகிறது. வீரிய ஒட்டு மா ரகங்கள் கன்று ஒன்று ரூ.50ஃ-, கொய்யா பதியன் ரூ.25ஃ-, வீரிய ஒட்டு பப்பாளி ரூ.16ஃ-, எலுமிச்சை ரூ.8ஃ- என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பொது மக்களுக்குத் தேவையான புங்கன், வேம்பு, புளி, தேக்கு, சவுக்கு, இலவம் போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்குத் தேவையான காய்கறி நாற்றுகள், கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற நாற்றுகள் குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்யப்பட்டு நாற்று ஒன்று ரூ.1 வீதம் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைத்து உள்ளவர்களுக்குத் தேவையான காய்கறி நாற்றுகள் குழித்தட்டு முறையில் முன்பதிவு செய்வதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், திருமணம், புதுமனை புகுவிழா போன்ற இல்ல விழாக்களுக்குத் தேவையான பூக்கன்றுகள், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாய பெருங்குடிகள் தங்களுக்குத் தேவையான நாற்றுகளை அரசு தோட்டக்கலைப் பண்ணை, பூவாணி மற்றும் திருவில்லிபுத்தூர் (மேலத்தொட்டியபட்டி) அணுகி பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இதர தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் முன்பதிவு செய்வதற்கு 9787311798 மற்றும் 9751459404 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ச.தமிழ்வேந்தன்,பி.எஸ்.ஸி (தோ.க.),
தோட்டக்கலை துணை இயக்குநர்(பொ)
விருதுநகர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


