அச்சுறுத்தலால் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது: பா.ஜ.வுக்கு மம்தா எச்சரிக்கை

வியாழக்கிழமை, 11 மே 2017      அரசியல்
Mamata(N)

கொல்கத்தா-  அச்சுறுத்தலாலும் பயமுறுத்தலாலும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று பாரதிய ஜனதாவுக்கு மம்தா பானர்ஜி கடுமையாக எச்சரித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பாரதிய ஜனதா முயற்சி செய்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா தலைவர் அமீத்ஷா சமீபத்தில் அந்த மாநிலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரும் சட்டசபை தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய யூகம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் பாரதிய ஜனதாவுக்கு மேற்குவங்க திரிணாமூல் காங்கிரஸ் முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அச்சுறுத்தலும் பயமுறுத்தலும் என்னை அமைதியாக்கிவிட முடியாது என்று கூறினார். மேற்குவங்க மாநிலமானது, பிரிவினைவாத அரசியலில் இருந்தும்  சகிப்புதன்மையின்மையிலிருந்தும் நாட்டை காப்பாற்ற  அயராது பாடுபடும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.

பாரதிய ஜனதாவின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் அமைதியாக இருக்கலாம. ஆனால் என் மாநிலம் அதை எதிர்த்து போரிட அஞ்சாது என்றும் மம்தா ஆவேசமாக கூறினார். புத்த பூர்ணிமாவையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி மேற்கண்டவாறு கூறினார். என்னை சிறையில் அடைக்க பாரதிய ஜனதா தயாராக இருக்கிறதா? அப்படி என்னை சிறையில் அடைத்தாலும் நாட்டில் வகுப்புவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் என் உயிர்மூச்சு உள்ளவரை எதிர்த்து போராடுவேன் என்றும் மம்தா பானர்ஜி மேலும் கூறினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்: