முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட அளவிலான உணர்திறன் பயிற்சி:கலெக்டர் கந்தசாமி துவக்கிவைத்தார்

செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 திருவண்ணாமலை மாவட்டத்தில் குறைந்துவரும் பாலின விகிதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட சமூக நல துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான உணர்திறன் பயிற்சி தி.மலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையேற்று பயிற்சியை துவக்கிவைத்தார்.

உணர்திறன் பயிற்சி

ப்பயிற்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா தா.டார்த்தி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் க.தமிழரசி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா, ஆகியோர் கலந்து கொண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்தும் மாவட்ட சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சுகாதார துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். பயிற்சியாளர்கள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு களப்பணியில் சந்திக்கக் கூடிய நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து குழு நாடகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவது குறித்தும் கலந்துரையாடல் செய்து காட்சி படுத்தப்பட்டது. மேலும் பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்ட குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து விநாடிவினா நடத்தப்பட்டது. மாவட்ட சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் பணியாற்றும் களப்பணியாளர்கள் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் சுகாதார துறையின் கீழ் பணியாற்றும் களப்பணியாளர்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றி பெண் குழந்தைகளின்பாலின விகிதத்தை உயர்த்துவது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பது குறித்து குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட சமுக நலத்துறை அதிகாரி செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து