முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு நிறுவனங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க புதிய யூனிட்: சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவிப்பு

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, 2018-19 ஆம் ஆண்டில் 133 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.7.01 கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் அலகுகள் நிறுவப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் கூட்டுறவு துறை குறித்த மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ 12 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார், அதன் விபரம் வருமாறு:-

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையினை நவீன வசதிகள் வழங்க 14 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் தற்போதைய அலுவலகக் கட்டிடங்கள் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 10 கூட்டுறவு நிறுவனங்களில் வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகங்கள் ரூ.32.70 லட்சம் மதிப்பீட்டிலும், 9 கூட்டுறவு நிறுவனங்களில் நவீன உயர்தர பாதுகாப்புப் பெட்டகங்கள் ரூ.37.53 லட்சம் மதிப்பீட்டிலும், 13 கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பு பெட்டகங்கள் ரூ.28.21 லட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் 32 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.98.44 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு, கல்குளம்  விளவங்கோடு மற்றும் திண்டுக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் சின்னகல்ராயன் பெரும்பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றிற்கு ரூ.61.70 லட்சம் மதிப்பில் புதிய அலுவலகக் கட்டிடங்கள்  கட்டுதல், திருப்பூர், தாராபுரம், பல்லடம், திருச்செங்கோடு மற்றும் பழனி  வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் அலுவலகக்  கட்டிடங்கள் ரூ.49.60 லட்சம் மதிப்பில் நவீனமயமாக்குதல், சத்தியமங்கலம்  மற்றும் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் ரூ.35.00 லட்சம் மதிப்பில் ஏலக்களத்திற்கு மேற்கூரை அமைத்தல், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் திண்டல் கிளையில் ரூ.11.40 லட்சம் மதிப்பில் பாதுகாப்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறை அமைத்தல், திருப்பெரும்புதூர் மற்றும் மதுராந்தகம் தாலுக்கா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு ரூ.39.லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டுதல் ஆகிய பணிகள் மொத்தம் ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுமை சமையல் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை பிற கூட்டுறவுச் சங்கங்களுக்கு விநியோகம் செய்வதற்கும், பொது விநியோகத்திட்ட பொருட்களை   நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்யவும் இரண்டு வாகனங்கள் மற்றும் சத்தியமங்கலம்  மற்றும் பவானி ஆகிய வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்  சங்கங்களுக்கு பொது விநியோகத்திட்ட பொருட்களை நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்திட தலா ஒரு வாகனம் என மொத்தம் ரூ.69.41 லட்சம்  மதிப்பீட்டில் 4 வாகனங்கள் வாங்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சொந்தமாக திருவாரூர் மாவட்டம், பாமணி என்ற இடத்தில்  செயல்படும் உரத்தயாரிப்பு ஆலை பாமணி 17:17:17 என்ற குருணை வடிவிலான  உரத்தினை உற்பத்தி செய்து வருகிறது. மேற்படி உர ஆலையின் செயல்பாட்டினை  மேம்படுத்தும் பொருட்டு ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள்  மேற்கொள்ளப்படும்.

பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் வேளாண் விளைப்பொருட்களைப் பதப்படுத்தி, மதிப்பினைக் கூட்டி விற்பனை செய்து விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் அதிக இலாபம் பெற்று, தங்களது வாழ்வாதாரத்தினை வளமாக்கிக் கொள்ள, சத்தியமங்கலம் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில், சிறுதானியங்களில் உமி, தூசி நீக்கும் அலகு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும். கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், கடலூர் மாவட்ட  சரவணபவா நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு,  கட்டுப்பாடற்ற பொருட்களை கொள்முதல் செய்து, நுகர்வோருக்கு விற்பனை செய்ய ஏதுவாகவும், நுகர்வோர் சேவைகளை மென்மேலும் பெருக்கவும்  நடைமுறை மூலதனக் கடன் ரூ.50 லட்சம் வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சொந்தமான இடத்தில் பண்டகசாலையின் வியாபார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, 500 மெட்ரிக்  டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும், சுற்றுச்சுவர் ரூ.5  லட்சம் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். 
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கேழ்வரகு மற்றும் கோதுமை மாவு அரைக்கும் இயந்திரம், பேக்கிங் மெஷின் கன்வேயர் மற்றும் அரவைக்கூடத்தினை நவீனமயமாக்கும் பணிகள் ரூ.23.94 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். நுகர்வோர்களுக்கு தரமான நுகர்பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதற்கு ஏதுவாக, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கேழ்வரகு  மாவு அரைக்கும் இயந்திரம் ரூ.1.48 லட்சம் மதிப்பீட்டிலும், அதற்கான மாவு  பேக்கிங் மெஷின் மற்றும் கன்வேயர் ரூ.7.15 லட்சம் மதிப்பீட்டிலும், கோதுமை  அரைக்கும் இயந்திரம் ரூ.1.48 லட்சம் மதிப்பீட்டிலும், அதற்கான மாவு பேக்கிங்  மெஷின் மற்றும் கன்வேயர் ரூ.7.15 லட்சம் மதிப்பீட்டிலும், மேற்படி  அரவைக்கூடத்தினை நவீனமயமாக்கும் பணிகளை ரூ.6.68 லட்சம்  மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் மேற்படி பணிகள் அனைத்தும் ரூ.23.94 லட்சம்  மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படும்,  மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின்  உறுப்பினர்களுக்கான சேவையை மேம்படுத்தும் பொருட்டு, புதிய அலுவலகக்  கட்டிடம் மற்றும் வணிக வளாகம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

பொதுமக்களுக்கும், நுகர்வோர்களுக்கும் தரமான நுகர்பொருள்களை நியாயமான  விலையில் வழங்கி, விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றி வரும் கூட்டுறவு பண்டகசாலையின் சேவையினை மேலும் மேம்படுத்திட ஏதுவாக, திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் உள்ள சுயசேவைப் பிரிவினை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். திருவாரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்குச் சொந்தமான இடத்தில், புதிய கிடங்கு ரூ.10 லட்சம்  மதிப்பீட்டில் கட்டப்படும். மேலும் பண்டகசாலையின் உட்கட்டமைப்பு  வசதிகளை மேம்படுத்தும் விதமாக ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் நீர்சுத்திகரிப்பு  கருவி அமைக்கவும் மற்றும் கண்காணிப்புக் கேமிரா ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில்  பொருத்தவும் ஆக மொத்தம் ரூ.12.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள்  மேற்கொள்ளப்படும்.
வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்தும் விதமாக, விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்குச் சொந்தமான இடத்தில், புதிய சுயசேவைப்பிரிவு ரூ.9.86 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் அண்ணா நகர் இரண்டாவது அவென்யூ கிளையில் வாடிக்கையாளர்களின் மதிப்பு மிக்க பொருட்களை பாதுகாக்கும்  பொருட்டு, நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட தானியங்கி  வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகம் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.  இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணிநேரமும் கடவுச் சொல்லினை பதிவு  செய்து பாதுகாப்பு பெட்டக வசதியைபயன்படுத்த இயலும். இந்த தானியங்கி  பாதுகாப்பு பெட்டகம் உயர்தர பாதுகாப்பும், துல்லிய சேவையையும் வழங்கக்  கூடியவை. கூட்டுறவு நிறுவன வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவையினை தடையின்றி வழங்கவும், கூட்டுறவு நிறுவனங்களில் மின் செலவினத்தைக் குறைக்கவும், 2018-19 ஆம் ஆண்டில் 133 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ. 7.01  கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் அலகுகள்  நிறுவப்படும்.

மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் 11 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ. 66.00 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள காலி இடங்களில் வணிக  வளாகம் மற்றும் திருமண மண்டபம் கட்டுவதன் மூலம், சங்கங்களின்  வருவாயைப் பெருக்க முடியும் என்பதால், 5 கூட்டுறவு நிறுவனங்களில் வணிக  வளாகமும், 1 கூட்டுறவு நிறுவனத்தில் திருமண மண்டபமும் ரூ.3.35 கோடி  மதிப்பீட்டில் இவ்வாண்டில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக  கட்டப்படும். இதனால் இச்சங்கங்களில் உள்ள காலி இடங்களை முழுமையாகப்பயன்படுத்தி,  இந்த வளாகங்களை வாடகைக்கு விடுவதன் மூலமாக சங்கங்களின்நிதிநிலை  உயரும். வணிக வங்கிகளுக்கு இணையாக நவீன தொழில்நுட்ப சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் அண்ணா நகர் 2-வது அவென்யூ கிளை மற்றும் பாண்டிபஜார் கிளைகளில் வாடிக்கையாளர்கள், 24 மணி நேரமும் பணம் செலுத்த மற்றும் பணம் பெற ஏதுவாக பணம் செலுத்தும் இயந்திரம் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் மற்றும் கணக்கு புத்தக அச்சு இயந்திரம் ஆகியன ரூ.20.லட்சம்  மதிப்பீட்டில் நிறுவப்படும்.

மேலும் வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் பெற ஏதுவாக முத்தியால்பேட்டை மற்றும் இராயபுரம் கிளைகளில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் ரூ.10.லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்படும். ஆக மொத்தம் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு இச்சேவைகளை வழங்க ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும். நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக நகர்ப்புறத்திற்கு அருகில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை, நகர மக்களின் வங்கித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் மாற்றியமைப்பது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு 2018-19 ஆம் ஆண்டில் 12 தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்களாக மாற்றியமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து