முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்களுக்கு இணையதளம் தொடங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025      தமிழகம்
Image Unavailable

சென்னை, குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் புதிய இணையதளம் தொடங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான வேலுவின் மகளின் திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திப் பேசிய மு.க.ஸ்டாலின், "திருமணம் செய்து கொள்ளும் மணமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன், உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும், அதற்கான பொருளும் அடங்கிய இணையதளம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். முதல்வரின் அறிவிப்புக்கு தமிழ் மொழி ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து