முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஹானே, அக்‌ஷர் பட்டேல் காயம்

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025      விளையாட்டு
Rahane -2024-12-02

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தா - டெல்லி இடையிலான போட்டியில் கேப்டன்கள் ரஹானே, அக்‌ஷர் பட்டேல் இருவரும் காயமடைந்தனர்.

அபார வெற்றி.... 

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி திடலில் நடைபெற்ற கொல்கத்தா - தில்லி இடையிலான பரபரப்பான போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தின் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பொறுப்பு கேப்டன் சுனில் நரைன் ஆட்டநாயகன் விருதை வென்றார். 18 வது ஓவரின்போது மிட் விக்கெட்டில் பீல்டிங் செய்து கொண்டிருந்த டெல்லி அணியின் கேப்டன் அக்‌ஷர் பட்டேல் கையில் காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இருப்பினும், அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்து 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இரண்டு தையல்கள்... 

இதற்கிடையில், கொல்கத்தா அணியின் கேப்டனான ரஹானேவுக்கும் ஷார்ட் கவரில் பீல்டிங் செய்யும் போது கையில் அடி விழுந்தது. அதன் பிறகு அவர் களமிறங்கவில்லை. அவருக்குப் பதிலாக சுனில் நரைன் பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆல்ரவுண்டர் அனுகுல் ராய் கூறுகையில், ரஹானேவுக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், அவை இரண்டு அல்லது மூன்று நாள்களில் குணமாகும் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து