முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் தாக்குலில் பலியானவரின் குடும்பத்தினரை நேரில சந்தித்து ராகுல் ஆறுதல்

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025      இந்தியா
Rahul 2024-12-03

Source: provided

பஹல்காம் : பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

உத்தரப் பிரதேசம் ரேபரேலி மற்றும் அமேதி மக்களவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ராகுல் காந்தி இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். நேற்றுமுன்தினம் தனது சொந்த தொகுதியாக ரேபரேலியில் ஆய்வு மேற்கொண்ட அவர், நேற்று அமேதி தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, கான்பூர் சென்ற ராகுல் காந்தி, பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட சுபம் திவேதி என்பவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். முன்னதாக, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடுதிரும்பிய ராகுல் காந்தி காங்கிரஸ் செயற்க்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பின்னர், ஜம்மு - காஷ்மீருக்குச் சென்ற ராகுல் காந்தி தாக்குதலில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சிகள் உடன் நிற்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து