பிரதமர் மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்க மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். மோடியை சந்தித்த போது, இனிப்புகளையும், குர்தாவையும் மம்தா பானர்ஜி பரிசாக வழங்கினார். மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மம்தா சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவது குறித்து பிரதமருடன் விவாதித்தேன் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ரூ.13,000 கோடி முதலீடு செய்யப்படுவதாக கூறிய மம்தா பானர்ஜி, பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பது குறித்தும் பிரதமரிடம் விவாதித்தாகவும் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் அரசியல் ரீதியாக கடுமையாக சமீப காலமாக மம்தா விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.