முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறுமை ஒழிப்புக்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி தம்பதியருக்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வறுமை ஓழிப்புக்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி தம்பதியருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி .பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதார திட்டங்களை வகுத்தமைக்காக அபிஜித் பேனர்ஜி அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோக் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு கிடைத்ததற்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் பிறந்த சர்வதேச பொருளாதார மேதையான அபிஜித் பேனர்ஜி பொருளாதார ஆராய்ச்சியாளராகவும் பேராசிரியராகவும் திறம்பட பணியாற்றி வருபவர். அபிஜித் பேனர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டூஃப்ளோ ஆகிய இருவரும் இயக்குநர்களாக உள்ள ஜெ- பால் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு இதுவரை 7 துறைகளில் 15 ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அபிஜித் பேனர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்ளோ உட்பட உலகப் புகழ் பெற்ற பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்துகளைப் பெற்று தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்கான திட்டங்களைத் தீட்டி வருகிறது. அபிஜித் பேனர்ஜி மற்றும் அவருடைய மனைவி எஸ்தர் டூஃப்ளோ ஆகிய இருவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைத்ததற்கு தமிழ்நாடு மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து