முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்ஸியை வழங்கிய கோலி

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் சிராஜ், யாஷ் தயாஸ்ல், வைசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 64 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் முகமது சிராஜ்-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் குஜராத் வீரர் நூர் அகமதுவுக்கு விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஆர்.சி.பி ஜெர்ஸியை வழங்கி பாராட்டி உள்ளார். அந்த ஜெர்சியில், அன்புள்ள நூர், நன்றாக பவுலிங் செய்தீர்கள் - உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் என எழுதி கோலி கையெழுத்திட்டுள்ளார். கோலி 42 ரன் எடுத்த நிலையில் நூர் அகமதுவின் பந்துவீச்சில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________

தமிழக அணி அறிவிப்பு

தமிழக கிரிக்கெட் அணி (கோல்ட்ஸ்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டில் உள்ள கிளப் அணிகளுக்கு எதிராக 7 ஒருநாள் மற்றும் நான்கு 2 நாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடர் நாளை (6ந் தேதி) முதல் 26ந் தேதி வரை நடக்கிறது. இங்கிலாந்து பயணத்துக்கான தமிழக அணியை, தமிழக கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி அறிவித்துள்ளார். அணி வருமாறு:

பிரதோஷ் ரஞ்சன் பால், என்.ஜெகதீசன், எஸ்.லோகேஷ்வர், பி.சச்சின், ஆர்.விமல்குமார், ஏ.பத்ரிநாத், எம்.பூபதி வைஷ்ணகுமார், மொகித் ஹரிகரண், முகமது அலி, மாதவ பிரசாத், வித்யுத், விக்னேஷ், லக்ஷய் ஜெயின், கார்த்திக் மணிகண்டன், சோனு யாதவ், திரிலோக் நாக், அச்யுத், தீரன், லோகேஷ் ராஜ், மானேஜர்: ஸ்ரீ வாசுதேவதாஸ், ஆலோசகர்: ராபின் சிங், பயிற்சியாளர்: எல்.பாலாஜி, பேட்டிங் பயிற்சியாளர்: தன்வீர் ஜாப்பர், பிசியோ: சக்திவேல், வீடியோ அனலிஸ்ட்: பாதுல் ஸ்ரீனிவாசன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து