முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      தமிழகம்
Kodai 2024-05-04

Source: provided

நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகாலத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க கொரோனா காலத்தில் அமல்படுத்தியதுபோன்று இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி வருகிற 7-ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, epass.tnega.org என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் இன்று காலை 6 மணி முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று நீலகிரி கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து