முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெலன்ஸ்கியை தேடப்படுவோர் பட்டியலில் வைத்தது ரஷ்யா

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      உலகம்
Jelensky 2024-05-04

Source: provided

கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள ரஷ்யா அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் வைத்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிராக 2 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா படையெடுத்தது.  எனினும், இது ஒரு ராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா கூறியது.  உக்ரைனின் கீவ், டோனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா தொடக்கத்தில் கைப்பற்றியது.  ஆனால் அவற்றை உக்ரைன் பின்னர் மீட்டது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷ்யா பதிவு செய்துள்ளது.  அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் ரஷ்யா வைத்துள்ளது. இது பற்றி ரஷ்யாவில் இருந்து வெளிவரும் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 

ரஷ்ய உள்துறை அமைச்சரின் தகவலின்படி, ரஷ்யாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளார்.  ஆனால், வேறு எந்த தகவலும் இல்லை என தெரிவித்து உள்ளது.

உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் மக்கள் பலர் மற்றும் பிற ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு எதிராக ரஷ்யா கைது வாரண்டுகளை பிறப்பித்து உள்ளது. 

இதன்படி, எஸ்தோனியா நாட்டு பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா நாட்டின் கலாசார அமைச்சர் மற்றும் லத்விய நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்தனர்.  

சோவியத் நாடாக இருந்த காலத்தில் இருந்த நினைவு சின்னங்களை அவர்கள் அழித்து விட்டனர் என கூறி இந்த பட்டியலில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் மீதும் கடந்த ஆண்டில் ரஷ்யா கைது வாரண்டுகளை பிறப்பித்தது.  

எனினும், இந்த தகவலை உக்ரைன் நிராகரித்து உள்ளது. இது பற்றி உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், 

ரஷ்ய சர்வாதிகாரி விளாடிமிர் புடினுக்கு எதிராக போர் குற்றங்களை புரிந்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுவதற்கான வாரண்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.  இது 123 நாடுகளில் அமல்படுத்தப்பட்டு உள்ளது என குறிப்பிட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து