Idhayam Matrimony

கொட்டி தீர்க்கும் கனமழை எதிரொலி: மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் இ,பி.எஸ் உத்தரவு - மழை நிலவரங்களை கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுங்கள்!

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அம்மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு அணை நிலவரங்களை கண்காணிக்குமாறும், மழை நிலவரங்களை கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

காற்றழுத்த தாழ்வுநிலை

வங்கக் கடலில் இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 14 செ.மீ. மழை பெய்ததால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. கோதையார் லோயர் அணை பகுதியில் 9 செ.மீ. அளவுக்கு மழை பெய்தது. சுரலகோடு, குலசேகரபட்டினம் பகுதியில் 8 செ.மீ. மழையும், மயிலாடி, தூத்துக்குடியில் 7 செ.மீ. மழையும், தென்காசி, வேடசந்தூர், தக்கலை உள்பட பல பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

கலெக்டர்களுக்கு உத்தரவு

தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு அணை நிலவரங்களை கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவைப்பட்டால் நிவாரண முகாமுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். மழை நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இதே போல் நீலகிரி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டும் எடப்பாடி பழனிசாமி தகுந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.

ரெட் அலர்ட்?

இந்நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் நாளை (இன்று) மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து