ரிக்கி பாண்டிங் - கில்கிறிஸ்ட் அணிகள் மோதும் காட்சி கிரிக்கெட் போட்டி - மெல்போர்னுக்கு மாற்றம்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2020      விளையாட்டு
Ricky Ponting-Gilchrist 2020 02 06

மெல்போர்ன் : காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரணம் திரட்டுவதற்கான ‘புஷ்பையர் கிரிக்கெட் பாஷ்’ காட்சி போட்டி மெல்போர்னுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக புஷ்பையர் காட்டுத்தீ மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தியது. குறிப்பாக சிட்னியை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. இதற்கு நிவாரணம் ஈட்டுவதற்காக புஷ்பையர் கிரிக்கெட் பாஷ் என்ற பெயரில் காட்சி போட்டியை நடத்த திட்டமிட்டனர். ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும் இதில் விளையாடுகின்றன. இந்த போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த போட்டி சிட்னியில் இருந்து 9-ந்தேதி மெல்போர்னுக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பிக் பாஷ் டி20 லீக்கின் இறுதிப் போட்டி சிட்னியில் 8-ம் தேதி நடக்கிறது. இதுவும் ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து