முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11-வது நாளாக தொடர்ந்த போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜனவரி 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, “தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதி 181-ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றும் வரை போராட்டக் களத்தை விட்டு நகரப் போவதில்லை” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி 181-ன் படி, 12,000 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்ற போராட்டம் 11-வது நாளை எட்டியுள்ளது.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுத் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் என்பவர், “எப்போதுதான் முதல்வர் எங்களை பணி நிரந்தரம் செய்வார்?” என்ற கடும் மன உளைச்சலில் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் உலுக்கியுள்ளது.

ஒரு ஆசிரியர் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட பின்னரும், தமிழக அரசோ அல்லது முதல்வரோ உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையோ, அவரது மனைவிக்கு அரசு வேலையோ அறிவிக்காதது கடும் கண்டனத்திற்குள்ளாகி உள்ளது.

ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் பணிபுரிந்த பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் வாக்குறுதி செய்வதாக சொன்ன தி.மு.க. ஆட்சியில் 2024-ம் ஆண்டில் சம்பள உயர்வாக ரூபாய் 2,500 வழங்கப்பட்டு தற்போதுவரை 12,500 ரூபாய் சம்பளமே கிடைக்கிறது. இந்த நிலையில் தி.மு.க.வின் 5 ஆண்டு ஆட்சியே முடியப் போகிறது என்பதால் பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

பணி நிரந்தரம், காலமுறை சம்பளம் இல்லாமல் அரசு சலுகைகள், பணப் பலன்கள் இல்லாமல் இனி கிடைக்கப் போகும் இந்த வெறும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வைத்து பகுதிநேர ஆசிரியர்கள் அவர்களின் 12 ஆயிரம் குடும்பங்கள் எப்படி அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து அன்றாட வாழ்க்கையை நடத்த முடியும். “பகுதிநேர ஆசிரியர்களுக்குத் தேவை சொற்ப சம்பள உயர்வு அல்ல; பணிப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ‘பணி நிரந்தரம்’ மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து