முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றின் தரத்தை அறிய மாநகராட்சி நடவடிக்கை: சென்னையில் 100 இடங்களில் டிஜிட்டல் பலகைகள் அமைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜனவரி 2026      தமிழகம்
Air-Quality-2026-01-18

சென்னை, சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் ரூ.6.36 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக, மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை நுழைவு வாயிலில் ஒரு டிஜிட்டல் பலகை சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மற்ற 100 இடங்களிலும் இந்தப் பலகைகளைப் பொருத்தும் பணிகள் 2026 பிப்ரவரி இறுதிக்குள் நிறைவடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் 15 மண்டலங்களிலும் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்தப் பலகைகள் நிறுவப்பட உள்ளன. இதில் காற்றின் தரம், பி.எம் 2.5, பி.எம் 10, நச்சு வாயுக்களின் அளவு, காற்றின் வேகம், வெப்பநிலை மற்றும் மழை அளவு உள்ளிட்ட 19 வகையான தரவுகள் காட்சிப்படுத்தப்படும்.

இந்தத் திட்டம் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் இயக்கப்படுகிறது. அதாவது, இந்தத் திரைகள் தினமும் 15 மணிநேரம் செயல்படும். இதில் இரண்டு மணிநேரம் அரசு அறிவிப்புகள் மற்றும் காற்றின் தர விவரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள 13 மணிநேரம் வருவாயை ஈட்டுவதற்காக வணிக ரீதியான விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து