முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு ஜூன் மாதம் வரை கெடு;

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : தீவிரவாதிகளுக்கு நிதி செல்லும் ஆதாரங்களைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடாமல் கறுப்புப் பட்டியலில் இருக்கும் பாகிஸ்தான் அதிலிருந்து மீள்வதற்கு இன்னும் பல்வேறு நிபந்தனைகளை அடுத்த 4 மாதங்களுக்குள் நிறைவேற்ற அவகாசத்தைச் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு (எப்.ஏ.டி.எப்.) அளிக்கும் எனத் தெரிகிறது.

சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கைக்கான கண்காணிப்பு அமைப்பு (எப்.ஏ.டி.எப்.) 1989 - ல் நிறுவப்பட்டது. சர்வதேச அளவில் பல நாடுகளுக்கு இடையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, தீவிரவாதத்துக்கு உதவும் வகையில் நிதியுதவி உட்படச் சர்வதேச நிதி நடைமுறையின் ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை முறியடிப்பதே இதன் நோக்கம்.இந்த அமைப்பின் வருடாந்திர கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 1 முதல் 21-ம் தேதி வரை பாரிஸில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டின் வருவாய்த்துறை அமைச்சர் ஹமாத் அசார் பங்கேற்றுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தின்போது, தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் இ தொய்வா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட நிதி கிடைப்பதைத் தடுக்கும் வகையில் பாகிஸ்தான் போதுமான அளவில் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி அந்த நாட்டை க்ரே லிஸ்டில் வைக்கச் சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்தது.

2020 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் பாகிஸ்தான் க்ரே லிஸ்டில் இருந்து மீள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் கறுப்புப் பட்டியலில் ஈரானுக்கு அடுத்தார் போல் சேர்க்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது பாரிஸில் நடந்து வரும் கூட்டத்தின் இறுதி நாளான நேற்று சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு பாகிஸ்தான் அமைப்புக்கு ஜூன் மாதம் வரை அவகாசம்அளிக்கும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து