கேதார்நாத் கோவில் ஏப்ரல் 29 - ம் தேதி திறக்கப்படும்

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      இந்தியா
Kedarnath Temple 2020 02 21

டேராடூன் : உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோவில் நடை வரும் ஏப்ரல் மாதம் 29 - ம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர் காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு வரும் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கேதார்நாத் கோவில் நடை ஏப்ரல் 29 - ம் தேதி திறக்கப்படும். காலை 6.10 மணிக்கு வேத கோஷங்கள் முழங்க பூஜை நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து