எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை நீடிக்கிறது. மேலும் தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள் மற்றும் மால்களுக்கும் தடை நீடிக்கிறது.
தமிழகத்தில் ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு நேற்று முன்தினம் அனுமதி அளித்த நிலையில் தமிழக அரசோ வழிபாட்டு தலங்களை திறக்க தொடர்ந்து தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் மால்களை திறக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
அம்மாவின் அரசு கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது. அதே நேரத்தில், அம்மாவின் அரசு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்டெடுத்தும் தொழில் வளத்தைப் பெருக்க புதிய திட்டங்களை செயல்படுத்தியும் வருகின்றது.
மத்திய அரசு, இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.5.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதே சமயம், ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேசன் பொருட்கள் அனைத்தும், 2.01 கோடி குடும்பங்களுக்கும் விலையில்லாமல் வழங்க உத்தரவிட்டுள்ளதுடன், கட்டிடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர்கள் ஆகியோருக்கு அரிசி போன்ற பொருட்களை கூடுதலாக வழங்கியும், அனைத்து 17 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற நல வாரிய தொழிலாளர்களை சேர்த்து 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே தலா 1,000 ரூபாய் வழங்கியதைப் போல், மீண்டும் தலா 1,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டேன்.
பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக 29.5.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ள பரிந்துரை செய்ய, 26.5.2020 அன்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையிலும், 26.5.2020 மற்றும் 30.5.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிக்கையின் அடிப்படையிலும், தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு 30.6.2020 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், சில தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்:- அவை வருமாறு,
* வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகள். எனினும், மருத்துவத் துறை, காவல் துறை, அரசு அலுவலர்கள், உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைப்படுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
* வணிக வளாகங்கள் (Shopping Malls). பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்கப்படுத்தலாம். மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். மெட்ரோ ரயில் / மின்சார ரயில். திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (Bar), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது, மேற்கண்ட கட்டுப்பாடுகள் தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.
மேலும் இறுதி ஊர்வலங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் (Except Containment Zones) கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: அதன்படி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். வணிக வளாகங்கள் (malls) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அனுமதிக்கப்பட வேண்டும்.
கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது. மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது. டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் TN e-pass இன்றி பயன்படுத்தலாம். ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது. முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் - Except Containment Zones),, கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் 1.6.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது: அதன்படி தொழில் நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். வணிக வளாகங்கள் (malls) தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம்.
மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது. டீ கடைகள், உணவு விடுதிகள் (7.6.2020 வரை - பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.
எனினும், உணவகங்களில் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது. மத்திய அரசு உத்தரவின்படி 8.6.2020 முதல் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் (E-Commerce) வழங்க அனுமதிக்கப்படுகிறது. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.
பொது
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின் படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொது மக்கள் இ-பாஸ் அனுமதியில்லாமல், தனியார் போக்குவரத்துக்கு அரசினால் அனுமதிக்கப்பட்டாலும், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள், இந்நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது, குறிப்பாக, வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளி நபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்றைத் தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. குறிப்பாக, சென்னையில் 15 மண்டலங்களிலும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்புள்ளவர்களைக் (Contact tracing) கண்டறியும் பணி மண்டல அளவில் மேற்கொள்ளப்படுவதுடன், நோய்த் தடுப்பு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஏழைகளுக்கு முகக்கவசம், வைட்டமின் மாத்திரைகள், கபஸ்வர குடிநீர், சத்தான உணவு போன்றவை வழங்கப்படுகிறது.
அவர்களின் வாழ்விடம் நெருக்கமாக இருந்தால், அவர்கள் தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் விபரம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, சென்னையில் உள்ள 149 நகர ஆரம்ப சுகாதார மையங்களிலும், 19 மருத்துவமனைகளிலும் காய்ச்சல் சோதனை மையம் (Fever clinic)செயல்படுவதுடன், 100-க்கும் மேற்பட்ட காய்ச்சல் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் தீவிரமாக கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றனர்.
இதனால் நோய்த் தொற்று முன்கூட்டியே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால், உயிரிழப்பு தவிர்க்க வழி வகுக்கும். இதே போன்ற நடவடிக்கைகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்புப் பணியில் தன்னலம் கருதாமல், அயராது களப்பணி ஆற்றிவரும் சுமார் 33,000 நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் சேவையை நான் மனதார பாராட்டுகிறேன். அவர்களின் இந்த அரிய சேவையை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் வகையில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் சிறப்பினமாக 2,500 ரூபாய் மதிப்பூதியம் (Honorarium)வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில், நோய்த் தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் (Hot spots / Containment Zones) உள்ள ஏழைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும், கொரோனா நோய்த் தொற்றுடன் ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற நோய் உள்ளவர்கள் (Co-morbid persons) இந்நோய்த் தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
இப்பகுதியில் வாழும் ஏழைகளின் வாழ்விடங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில் அமைந்துள்ளன. எனவே, ஒரு முக்கிய நோய் பரவல் தடுப்புப் பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக நெரிசலான குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள் தோறும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாட்களாவது தங்க வைத்து, அவர்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற ஒரு முக்கிய நடவடிக்கையை அம்மாவின் அரசு எடுத்து வருகிறது.
இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய்ப் பரவல் தடுக்கப்படும். அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்படும் போது, அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கப்படும்.
அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். எனவே, பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை2 days 18 hours ago |
ஆனியன்ப்ரை5 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 8.25 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது : செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஏற்பாடு
13 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
உயிர் தமிழுக்கு விமர்சனம்
13 May 2024கேபிள் டிவி தொழில் செய்து வரும் நாயகன் அமீர், நாயகி சாந்தினி ஸ்ரீதரனை கண்டதும் காதல் கொள்கிறார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2024.
13 May 2024 -
சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் : கோவை குற்றவியல் கோர்ட் அனுமதி
13 May 2024கோவை : சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கி கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.