முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடை பெற்றுக்கொண்டார்.

சென்னை காவல் ஆணையராக 2017-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்றார். 3 ஆண்டு 45 நாட்கள் அவர் பொறுப்பிலிருந்தார். அவரது பணிக்காலத்தில் பொதுமக்களுடன் இணைந்து பணியாற்றும் காவல் ஆணையராகப் பெயர் பெற்றார். கண்காணிப்பு கேமரா நிறுவியது, காவலன் செயலி, பேஸ் டேக்கர் எனக் காவல்துறையில் பல்வேறு முறைகளை அமல்படுத்தி குற்ற எண்ணிக்கையைக் குறைத்தார். பொதுமக்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும், சட்டப்படி நடக்க வேண்டும் என்பதில் உறுதியான காவல் ஆணையராக இருந்தார்.

இந்நிலையில் காவல் ஆணையர் உட்பட 39 காவல் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் மாற்றப்பட்டார். செயலாக்கப் பிரிவு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவர் பதவி ஏற்காத நிலையில் நேற்று காலை 10.45 மணியில் மகேஷ்குமார் அகர்வால் பதவி ஏற்றார். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார். பின்னர் முறைப்படி காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு காவல் உயர் அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து