முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 6.5 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.5 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், 3.94 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  இந்நிலையில், நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

இந்தியாவில் இதுவரை 648315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 442 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18655 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை 394227 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 235433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,92,990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,02,721 பேருக்கும், டெல்லியில் 94,695 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து