பாகிஸ்தானின் பிரபல டி.வி.யில் தோன்றிய இந்திய தேசியக்கொடி

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      உலகம்
Indian national flag 2020 08 03

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் பிரபல செய்தித் தொலைக்காட்சி திடீரென சில நிமிடங்களுக்கு ஹேக் செய்யப்பட்டு, இந்திய தேசியக்கொடி திரையில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பிரபல் டான் எனும் தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்பப்பட்ட சமயத்தில், திடீரென திரையில் இந்தியாவின் மூவர்ண தேசியக்கொடி தோன்றி சுதந்திர தின வாழ்த்துக்கள் ஒளிபரப்பாகியுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த ஹேக் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக குறிப்பிட்ட தொலைக்காட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து