Idhayam Matrimony

கல்லூரிகளில் நவம்பர் 1 முதல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கல்லூரிகளில் நவம்பர் 1 முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும் அக்டோபர் 31-க்குள் மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

2020 - 2021ம் ஆண்டிற்கான கல்லூரிகளுக்கான கால அட்டவணையை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். அக்டோபர் 31-க்குள் மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் முடிக்கவும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்ற அறிவிப்பையும் அவர் தம் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். 

கல்லூரிகள் நவம்பர் 1-ம் தேதி தொடங்கிய பிறகு அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் தேவையான தேர்வுகள் அனைத்தையும் நடத்தி முடிக்க முடியும் என்ற கால அட்டவணையும் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

முக்கியமாக செமஸ்டர் விடுமுறைகளுக்கான தேதிகளும் இந்த அட்டவணையில் யு.ஜி.சியின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கல்வி அமைச்சகமானது வெளியிட்டிருக்கிறது. 

மார்ச் 8 - 26 வரை முதல் பருவ தேர்வு நடைபெறும் எனவும், ஏப்ரல் 5-ம் தேதி முதல் ஆண்டுக்கான இரண்டாம் பருவ தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மார்ச் 27 முதல் ஏப்ரல் 4 வரை கல்லூரி முதல் பருவத் தேர்வு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்ட் வரையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அட்டவணையின்படி கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களானது மாணவர் சேர்க்கை, பாடத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தயாராக இருக்கும்படியும் மத்திய அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் 1-ம் தேதிலியிருந்து கல்லூரிகள் தொடங்கும் பட்சத்தில், யு.ஜி.சியின் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து