முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்ட கவர்னர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சனிக்கிழமை, 7 மார்ச் 2026      தமிழகம்
CM-3-2026-03-07

சென்னை, சென்னையில் மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (மார்ச் 7) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

கவர்னர் ஆர்.என். ரவி மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.

தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் கவர்னர் ரவிக்கும் இடையே பல விஷயங்களில் கருத்துப் போரும் இருந்து வந்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்ததும் அதுதொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்ததும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்திற்கு கவர்னரே தேவையில்லை என்று முதல்வர் உள்பட தி.மு.க.வினர் கூறிவந்த நிலையில் தற்போது கவர்னர் ஆர்.என். ரவி மேற்குவங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 அன்று ராஜிநாமா செய்தார். இதையடுத்து மேற்கு வங்கத்துக்கான புதிய கவர்னராக தமிழக கவர்னர் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டாா். தமிழக கவர்னர் பொறுப்பை கேரள மாநில கவர்னர் ஆா்.வி. ஆா்லேகா் கூடுதலாக வகிப்பாா் என குடியரசுத் தலைவா் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து