முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு: 2021-ல் மீண்டும்அம்மாவின் ஆட்சிதான் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் ஊரெங்கும் ஒரே பேச்சு. 2021-ல் மீண்டும் அம்மாவின் ஆட்சிதான் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை திருவிக நகர் மண்டலத்திற்குட்பட்ட புரசைவாக்கம் தானா தெருவில், கொரோனாதடுப்பு பணிகள் தொடபர்பாக வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கொரோனாவில் பாதிக்கப்பட்டுகுணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய களபணியாளர்கள் 3 பேருக்கு சால்வை அணிவித்து, நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். இந்த ஆய்விற்கு பிறகு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மருத்துவர் குழு உள்ளிட்டவர்களை நியமித்து, அவர்களது தீவிர பணியின் காரணமாக தற்போது சென்னையில் கட்டுக்குள் உள்ளது. தினமும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 82,928 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபபடியான பரிசோதனையின் காரணமாக  5,52,604 பேருக்குநோய்த்தொற்றுதமிழகத்தில் கண்டறியப்பட்டு, அதில் 4,97,377 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,தற்போது வெறும் 46,350 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நோய் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 தற்போது பொது போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில், குறைந்த அளவுபோக்குவரத்து மட்டுமே இயக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பயணம் செய்வதாக புகார்கள் வருகிறது.

எனவே படிப்படியாக பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் மேற்கொண்டுள்ளார். பிரதமருடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வழிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறித்து முதல்வர் ஆலோசனை செய்வார்.

மேலும் மருத்துவகுழு, வல்லுநர் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் படிபடியாக தளர்வுகளும்,  நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கை அமுல்படுத்த வேண்டிய அவசியம்,அதற்கான சூழல் இல்லை. வேளாண் மசோதா தொடர்பாக உரிய விளக்கத்தை முதல்வர் அளித்துள்ளார்.

பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள நிலை தமிழகத்தில் இல்லையென்றும், தமிழக விவசாயிகளுக்கு இந்த மசோதா மூலம் எந்த வித பாதிப்பும் ஏற்படாதும் எனவும் முதல்வர் தௌ;ள தெளிவாக தெரிவித்துள்ளார்.

அதே போன்றுநேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் தொடர்ந்து இயங்கும் என்றும் மத்திய அரசுதெரிவித்து விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போடப்படும் ஒப்பந்தங்களை தேவைக்கேற்ப புதுப்பித்து கொள்ளலாம் என எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கத்தை மத்திய அரசு அளித்து விட்டது.

தமிழக விவசாயிகள் மனநிலையை புரிந்து கொண்டுள்ள முதலமைச்சர் உரிய விளக்கத்தை நேற்றைய தினம் அளித்துள்ளார்.  இந்தியாவில் எந்த மாநில முதல்வரும் அளிக்காத விளக்கத்தை தமிழகமுதல்வர் அளித்துள்ளார்.

எனவே தமிழகத்தில் விவசாயிகளுக்கு எந்த வகையிலும் இதனால் பாதகம் இல்லை என்றும், முதல்வர் என்றைக்கும் விவசாயிகளுக்கு ஆதரவானவர். எல்லா விவசாயிகளுக்கு உண்மை நிலை தெரிய வேண்டும் என விளக்கமாக கூறும் வகையில் அரசு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து தமிழகத்தை போராட்ட களமாகவும், கொந்தளிப்புடன்  வைத்திருக்க வேண்டும் என நினைக்கிறார், அதற்காக பல்வேறு காரணங்களை தேடி அலைந்துகொண்டு இருக்கிறார்.

வெறும்வாயில் மெல்லுவதற்கு அவல் கிடைத்தது போன்று இப்போது வேளாண் மசோதா வைத்து மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் இது மக்களிடத்தில் எடுபடாது -

இதுபோன்று பல்வேறு பிரச்னைகளில் மக்களை திசை திருப்ப திமுக போட்ட அனைத்து திட்டங்களும் தோல்வியில் முடிந்துள்ளது. அதுபோன்று வேளாண்மசோதா தொடர்பாக விவசாயிகளிடம் பொய் பிரசாரம் செய்து வரும் திமுகவிற்கு. இந்த விஷயத்திலும் தோல்வி தான்கிடைக்கும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எவ்வாறு செயற்குழு கூட்டம் நடந்ததோ அதேபோன்று ஆரோக்கியமான ஆலோசனையை முன்னெடுத்து இந்த செயற்குழு கூட்டம் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் கட்சியை வழிநடத்த 11பேர் கொண்ட குழு அமைக்கப்படும். தேர்தல் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட ஆரோக்கியமான பல்வேறு கருத்துக்கள் இந்த பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் அதிமுகவில் இடைவெளி ஏற்படுமா அதில் நாம் எப்பொழுது நுழைய முடியும் என்று எதிர்பார்ப்பவர்களின் கனவுகள் பலிக்காது என்றும் திட்டவட்டமாக கூறிய அமைச்சர்,  'ஊரெங்கும் ஒரே பேச்சு@ 2021ல் அம்மாவின் ஆட்சி' தான். தமிழக மக்களும் அதிமுக அரசு செய்து வரும் பணியை ஏற்று கொண்டுள்ளனர்.

அதேபோல் இரண்டாம் தலைநகர் உருவாக்குவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரும் தன்னுடைய கருத்தைவிளக்கமாக கொடுத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக தானா தெருவில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு மருத்து முகாமை பார்வையிட்ட அமைச்சர் உதயகுமார், அங்கு மக்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பொதுமக்களுக்கு முககவசம், சானிடைசர், கபசுரகுடிநீர், வைட்டமின்மாத்திரைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார் இந்த நிகழ்வில்  கண்காணிப்பு அதிகாரி அரவிந்தன் ஐ.ஏ.எஸ்., முன்னாள் எம்.பி. பாலகங்கா, முன்னாள் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு ஆகியோர் பங்கேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து