முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபரான பின் எச்1 பி விசா குறித்த இந்தியர்களின் கவலை நீங்கும்: ஜோ பிடன்

வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் ‘எச்1பி’ விசா மட்டும் சட்டபூர்வ குடியேற்றம் குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் என ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடன் உறுதியளித்தார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலுக்காக குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரின் வாக்குகளை கவருவதற்கு இருவருமே தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய வம்சாவளியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழி நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இந்திய வம்சாவளியினர் தங்களின் கடின உழைப்பாலும், தொழில் முயற்சிகளாலும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு அளித்துள்ளனர். நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் எச்1பி விசா மட்டும் சட்டபூர்வ குடியேற்றம் குறித்த இந்தியர்களின் கவலைகள் போக்கப்படும் என உறுதியளித்தார். 

மேலும் இந்திய வம்சாவளியினரின் கலாசார, சமூக மற்றும் குடும்ப மதிப்புகள் மிகவும் பாராட்டுக்குரியவை என்று குறிப்பிட்ட அவர், அதனாலேயே இந்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோரை தான் மிகவும் மதிப்பதாகவும் மேலும் உலகின் மிகவும் செல்வாக்கான பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளை இந்திய சமூகம் அலங்கரிப்பதற்காகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து