முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு: பிற மாநில தலைவர்கள் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அந்தவகையில், கேரள முதல்வர் பினராய் விஜயன் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இசைக்கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது மறைவு நமது கலாச்சார வாழ்க்கைக்கு பெரும் இழப்பு. துயரமடைந்த குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார். 

இதேபோன்று எஸ்.பி.பி.யின் மறைவுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மரணம் துக்கத்தை அளித்தாலும் தனது பாடல்கள் மூலம் அவர் வாழ்வார் என்று சித்தராமையா பதிவிட்டுள்ளார். 

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இசை சாதனையாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவு செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது பொன்னான குரல், பல தலைமுறையினரை தாண்டி ஒலித்து கொண்டிருக்கும். அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், இசையுலக நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து