ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு: நடுவானில் தவித்த பா.ஜ.க. எம்.பி.

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      இந்தியா
Manoj-Tiwari 2020 10 30

Source: provided

பாட்னா : பீகாரில் தேர்தல் பிரசாரத்துக்கு பா.ஜ.க. எம்.பி. சென்ற ஹெலிகாப்டரில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நடுவானில் அவர் தவிப்புக்கு ஆளானார். 

பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி, பீகார் தேர்தல் பிரசாரத்திற்காக பாட்னாவில் இருந்து பெட்டிஹாருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். மோசமான வானிலையால், நடுவானில் ஹெலிகாப்டரில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, ஹெலிகாப்டரின் வானொலி சிக்னல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு மேல் ஹெலிகாப்டர் எங்கு சென்றது என்ற தகவலும் கிடைக்கவில்லை. எம்.பி. மனோஜ் திவாரி மற்றும் அவருடன் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து அச்சம் நிலவியது.

பின்னர், ஹெலிகாப்டர் பாட்னாவில் அவசர அவசரமாக தரையிறங்கியது. அனைவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  இருந்தும், ஹெலிகாப்டர் இயந்திர கோளாறு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து