முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது: கர்நாடக மந்திரி பரபரப்பு பேட்டி

திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020      இந்தியா
Eeswarappa 2020-11-30

Source: provided

பெங்களூரு : முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது என்று கர்நாடக மந்திரி தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. அவரது அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் கே.எஸ். ஈஸ்வரப்பா. 

அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்துக்களில் உள்ள எந்தவொரு சமூக பிரிவினருக்கும் தேர்தலில் போட்டியிட நாங்கள் தொகுதி வழங்குவோம். 

அவர் லிங்காயத் பிரிவை சேர்ந்தவராக இருப்பினும், குருபர், ஒக்கலிகர் பிரிவினராக இருப்பினும் அல்லது பிராமணராக இருப்பினும் எங்களுடைய கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதி வழங்கப்படும். ஆனால் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட தொகுதி வழங்கப்படாது என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து